RSS

Wednesday, March 23, 2011

மாணவர்கள் வெற்றிகரமாக பட்டம் பெற பெற்றோரின் பங்கு....

கொஞ்சம் கவனியுங்கள் !!! பாகம் -III

மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து முதல் செமெஸ்டர் / வருடம் முடிவடைந்திருக்கும் அல்லது முடியும் தருவாயில் இருக்கும். கடந்த பதிவுகளின் தொடர்ச்சி இது. சமயமின்மையே இப்பதிவு தாமதமானதற்கு காரணம்.

பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்து விடுவதோடு பெற்றவர்கள் கடமை முடிவதில்லை. அவர்கள் சரியான பாதையில் செல்கின்றனரா / ஒழுங்காக படிக்கின்றனரா என்று அடிக்கடி கவனித்துக்கொள்ள வேண்டும். சிறந்த முறையில் அவர்கள் பட்டம் பெற வேண்டாமா ?? அதற்கு நீங்களும் உதவுங்களேன்...

நான் சந்தித்த பல பெற்றோர்களே நான் இந்த பதிவை இட காரணம்.... பெற்றோர்கள் பல தரம் உண்டு அவற்றில் சில

1. படித்த சராசரி பெற்றோர்கள்.... (இவர்கள் பரவாயில்லை)

2. படித்த தந்தை.. மிக உயர்ந்த பதவி (நேரமின்மை). தாய் படிக்காதவர் அல்லது அதிக உலக அனுபவம் இல்லாதவர்.

3. படிக்காத தந்தை.. சொந்த தொழில்-வியாபாரம் செய்பவர் (நிறைய பணப்புழக்கம்)....

4. தந்தை தாய் இரண்டு பேரும் அதிகம் படிக்காதவர் (கண்மூடித்தனமாக பிள்ளை சொல்வதை நம்புவர்).

5. நகர வாசிகள் / கிராம வாசிகள் ( பந்தா... / அறியாமை)

6. வெளியூரில் / வெளிநாட்டில் இருப்பவர்கள் (தூரம் சிலருக்கு ஒரு குறை).

கல்லூரி மாணவர்கள் பெற்றோரின் அறியாமையும், பதவியையும், பணத்தையும், நேரமின்மையையும் துர் உபயோகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அவை என்னென்ன??

1. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தந்தை (படிக்காத விவசாயி) என்னிடம் தன் மகன் 40 பாடங்களில் பெயில் ஆகி இருப்பதாக கூறி அழுதார். 6 மாசத்துக்கொரு முறை பரீட்சை நடத்துறாங்களே உங்க மகனை கேட்கலையா என்றேன். கேட்டோமே!! செமெஸ்டர் பரிட்சை நடக்கும் போது ஃபீஸ் வாங்கிப்போவான் ஆனால் ரிஸல்ட் எப்போ வரும் என்று கேட்டால் அதெல்லாம் நாலு வருஷம் கழிச்சு கோர்ஸ் முடியும் போது தான் தருவாங்கண்ணு சொல்லுவான்.. அப்படி இல்லையாங்க என்று பரிதாபமாக கேட்டார்.


2. மாணவர்கள் இரண்டாவது வருடத்தில் கால் வைத்தவுடன்... மிக மும்முரமாக ஒரு விஷயத்தில் இறங்கிவிடுவார்கள்... என்னண்ணு கேக்குறீங்களா?? பாங்க் லோன் வாங்க லெட்டர் தயாரிப்பதில் ( பெற்றோருக்கு தெரியாமல் தான்.... ) இந்த பணத்தை கொண்டு அவர்களது ஆடம்பரச்செலவுகள் (பைக், லாப்டாப், ஊர்சுத்தல், மற்றும் பல) நடத்தப்படும். படித்து முடிக்கும் வரை இது வீட்டுக்கு தெரிய வரவே வராது.

3. சில வீட்டில் (பண புழக்கம் அதிகமுள்ள) கேட்கும் போதெல்லாம் பணம் கொடுப்பதால் பொய் சொல்லி அல்லது மிரட்டி (செத்து போவேன், காலேஜ் போக மாட்டேன் என்றெல்லாம்..) வாங்கிச் செல்வர். சில மாணவர்கள் திருடக்கூட துணிந்து விடுவார்கள். எங்கள் கல்லூரியில் ஒரு மாணவன் தான் உபயோகிக்கும் கம்ப்பூட்டர் லாப் கம்பூட்டர்களையே பார்ட் பார்டாக கழட்டி விற்றுக்கொண்டிருந்தான். பெற்றோருக்கு எவ்வளவு தலைகுனிவு.

4. க்ளாஸ் கட்டடித்து வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவது மாணவர்களுக்கு ஜாலியான விஷயம்... இது ஓவராகிப்போனால் அட்டெண்டன்ஸ் குறைவால் பரிட்சை எழுதமுடியாமல் போய்விடும். இது பல பெற்றோர்களுக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது.....

5. மாணவர்கள் சேர்ந்து ஊர் சுற்றுவது (உள்ளூர் இல்லீங்க வெளியூர்). அவங்களே பஸ்/கார் அமர்த்தி செல்வார்கள். இது சில நேரம் உயிரை குடிக்கும் பயணங்களாகி முடிந்து விடும். தொலை தூரத்தில் இருக்கும் பெற்றோருக்கு இது கவனிக்க முடியாத ஒன்று.

இவற்றை தடுக்க சில வழி முறைகள்

1. கல்லூரியில் சேர்த்த முதல் நாளே தெளிவாக பாட திட்டம் பற்றிய “rules and regulations” தெரிந்து வைத்துக்கொள்ள் வேண்டும்.

2. ஓவ்வொரு வகுப்புக்கும் ஒரு Class coordinator (ஒரு ஆசிரியையோ அல்லது ஆசிரியரோ) இருப்பார். அவரே அந்த மாண்வர்கள் பட்டம் பெறும் வரை கவனித்து கொள்வர். அவருடைய போண் நம்பர் மற்று email id தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

3. அவரை மதம் ஒரு முறை தொலைபேசியிலோ/நேரிலோ அல்லது மின் அஞ்சல் வழியாகவோ தொடர்பு கொண்டு கல்லூரி விஷேஷங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

4. ஓவ்வொரு கல்லூரிக்கும் ஒரு இணயதளம் இருக்கும்.. அதை அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் கல்லூரிகளில் நடந்த, நடக்கும், மற்றும் நடக்கப்போகும் நிகழ்ச்சிகள், பயிற்ச்சித்திட்டங்கள், பரிட்சைகளின் அட்டவணை, பரிட்சை முடிவுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கும். இணய தளம் இல்லையென்றால் மேலே சொல்லப்பட்டிருக்கும் மாத சந்திப்பின் போது தெரிந்து கொள்ள வேண்டும்.

5. காசு பணம் கேட்கும் போது யோசித்து தேவை அறிந்து கொடுக்க வேண்டும். வெளியூர்களுக்கு நண்பர்களோடு போக வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு பெற்றோர் அவர்களுடன் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு வைக்க வேண்டும்.

6. பிள்ளைகளின் நட்பு வட்டம் யார் யார் என்றும் அவரது, போன், மின்அஞ்சல் மற்றும் முகவரி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களையும் இடைக்கிடை தொடர்பு கொள்ள வேண்டும்.

7. தொடர்ந்து மார்க்கு குறைவாக வாங்குகிறார்களா... அப்படியானால் அவர்களுக்கு பாடம் சரியாக புரியவில்லை என்று அறிந்து கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை சந்தித்து பேசி Special care கொடுக்கச்சொல்ல்லாம்.

இல்லையேல் ட்யூசன் வைக்கலாம். முதலிலேயே இதை சரி செய்தல் சிறப்பு. அல்லது எப்போதும்... பரிட்சை எழுதிவிட்டு பாசாவோமா?? பெயிலாவோமா?? என்று பார்த்து பார்த்து காத்திருக்க வேண்டும்.

8. மாணவர்களுக்கு attendance குறித்துள்ள முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு எங்கள் கல்லூரியில் 75% இருந்தால் தான் பரிட்சை எழுத முடியும் இல்லாவிட்டால் அடுத்த வருடம் தான். இந்த attendance உங்க பிள்ளை எத்தனை நாள் நீங்க கட்டிக்கொடுத்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு போனான் என்பதை பொறுத்த்து இல்லை. அவன் ஒவ்வொரு பாடத்தில் எத்தனை மணி நேரம் அமர்ந்திருந்தான் என்பதை பொறுத்தது.

9. கடைசியாக உங்க செல்ல பிள்ளைக்கு கொஞ்சம் நல்ல புத்திமதிகளும்/ நன்னெறிகளும் (Ethics) சொல்லிக்கொடுங்க. நேர்மையாக வாழ்வதின் பலன்களையும் சொல்லுங்க. ஓவ்வொரு வருடமும் நிறைய மாணவர்கள் பரிட்சை ஹால்களில் பிடிபடுகிறார்கள். காப்பி/பிட்டு அடிக்க வித விதமான் முறைகள் கையாளுகிறார்கள். எப்படி காப்பி அடிக்கிறதுண்ணு ப்லான் போடுற சமயத்தில் அவங்க அழகாக படிக்கலாம்.

14 comments:

தமிழ்தோட்டம் said...

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Chitra said...

முன் போல கட்டுரை வடிவமாக தராமல், இந்த presentation ரொம்ப நல்லா இருக்குதுங்க.... மிகவும் பயனுள்ள கருத்துக்களை, நீங்கள் தந்து இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

goma said...

பெற்றோர்கள் பலதரம் அதில் ஏழாவதாக ஒரு வகை
தனக்கு விருப்பமான பாடத்தில்தான் தன் குழந்தைஅக்ளும் படிக்க வேண்டும் என்று ,அவர்களுக்கு விருப்பமில்லா படிப்பைத் திணிக்கும் பெற்றொர்

goma said...

அழகான விவரமான விஷயங்களோடு மாணவ மணிகள் மீது உங்களுக்கு உள்ள அக்கரையையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

நன்றி தமிழ்த்தோட்டம்...
நன்றி சித்ரா....
ந்ன்றி கோமா அக்கா.. நீங்க சொல்லியிருப்பது சரியே... இந்த மாதிரி பெற்றோரை கட்டாயமா அவங்க மகன்/ மகள் மேலே ஏமாற்றுவாங்க

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

டியர் மைதிலி, நீங்க லேட்-ஆக தொடர்ந்தாலும்.. நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க.

இதில் நீங்க சொல்லி இருக்கும் சில வழிமுறைகள், கல்லூரி மட்டும் அல்லாது, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

குறிப்பா.. குழந்தைகளின் பள்ளியோ, கல்லூரியோ... அங்கே பெற்றோர்கள் தொடர்புடன் இருப்பது மிக நல்ல விஷயம். அளவுக்கு மீறி, பணம் கொடுப்பதும், என்ன சொன்னாலும் அப்படியே நம்புவதும் தவிர்க்கப் பட வேண்டிய விசயங்கள்.


நல்ல பயனுள்ள பகிர்வு. :)

Ammu said...

பெற்றோர் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக அவசியமான கருத்துக்களை மிக அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள். இது இந்தியா மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் உள்ள பெற்றோருக்குத் தேவையான அறிவுரைகள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேலும் எழுதுங்கள்.

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

நன்றி ஆனந்தி...
நன்றி அம்மு...
உங்களை போன்றோர்களின் ஊக்கத்தின் பேரில் மேலும் எழுத முயர்ச்சிக்கிறேன்....

குணசேகரன்... said...

நல்ல பயனுள்ள பதிவு...நன்றி...

http://zenguna.blogspot.com

குணசேகரன்... said...

உங்கள் கூற்று அனைத்தும் உண்மை...
Keep it up these kinds of useful posts..

http://zenguna.blogspot.com

Rathnavel said...

நல்ல பதிவு.

அம்பாளடியாள் said...

சிறப்பான ஆக்கங்கள் நல்ல பயனுள்ள பகிர்வு .
வாழ்த்துக்கள் சகோதரி .உங்கள் தளத்தில் இணைந்துகொண்டேன் .
உங்களையும் விரும்பினால் என் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்
நன்றி பகிர்வுகளுக்கு......

பித்தனின் வாக்கு said...

good article. nalla karuththukkal

Rishvan said...

குழைந்தைகளுக்கு தேவையான ஆலோசனை......நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

Post a Comment